×

மீண்டும் நடிக்கிறார் எமி ஜாக்சன்

சென்னை: லண்டன் மாடல் அழகி எமி ஜாக்சன், தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘மதராச பட்டினம்’ என்ற படத்தில் அறிமுகமானார். மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரமுடன் சேர்ந்து ‘தாண்டவம்’ படத்தில் நடித்த எமி ஜாக்சன், தொடர்ந்து ‘ஐ’,‘தங்கமகன்’,‘கெத்து’,‘தெறி’,‘தேவி’,‘2.ஓ’ஆகிய படங்களில் நடித்தார். பிறகு பாலிவுட்டில் அறிமுகமான அவர், தெலுங்கு மற்றும் கன்னடம், ஆங்கிலப் படங்களில் நடித்தார். டி.வி தொடரிலும் தோன்றினார். ஒருகட்டத்தில் எமி ஜாக்சனுக்கு புதுப்பட வாய்ப்பு கிடைக்காததால் லண்டனுக்கு சென்றுவிட்டார். அங்கு தனது காதலன் தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவுடன் திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்த அவர், ஒரு மகனுக்கு தாயானார். அக்குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என்று பெயரிட்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக ஜார்ஜ் பனயிட்டோவை பிரிந்த எமி ஜாக்சன், தற்ேபாது ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலிப்பதாக கூறப்படுகிறது. முன்பு பாலிவுட் ஹீரோ பிரதீக் பப்பரை காதலித்து பிரிந்தார். பிறகு ஐரோப்பியா குத்துச்சண்டை வீரர் செல் கிர்க்குடனான காதலையும் முறித்துக்கொண்டார். இந்நிலையில், 4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எமி ஜாக்சன் நடிக்க வருகிறார். தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார்….

The post மீண்டும் நடிக்கிறார் எமி ஜாக்சன் appeared first on Dinakaran.

Tags : Amy Jackson ,CHENNAI ,London ,Arya ,AL Vijay ,
× RELATED மலர்களோடு பூத்துக் குலுங்கும்